பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதி, இந்திய இராணுவத்தின் உதவியுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலின் காரணமாக சேதமடைந்த பரந்தன்–முல்லைத்தீவு A35 பிரதான வீதியில் அமைந்திருந்த பாலம், இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து தற்காலிகமாக புனரமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்காலிக பெய்லி பாலம் நேற்று (23) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
