டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மீளச் சீரமைக்கும் நோக்கில் இந்தியா, 450 மில்லியன் டொலர் மதிப்பிலான நிவாரண உதவித் தொகுப்பை வழங்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (23) கொழும்பில் அறிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து நடைபெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்த உதவி தொகுப்பில் 350 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனாகவும், 100 மில்லியன் டொலர் நேரடி நிதியுதவியாகவும் வழங்கப்படும் என விளக்கினார்.
