கோரெட்டி புயல் தாக்கம்: வேல்ஸில் கடும் குளிர், பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோரெட்டி புயலின் தாக்கத்தால், வேல்ஸ் தற்போது பனிப்பொழிவு மற்றும் உறைபனியுடன் கூடிய கடுமையான குளிர்கால நிலையை எதிர்கொண்டு வருகிறது.

இந்த கடும் வானிலை காரணமாக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பல குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளிலும் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக ரயில் சேவைகளில் சில தாமதங்கள் மற்றும் ரத்து நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) வரை தொடரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில், சனிக்கிழமை நண்பகல் வரை பனிக்கட்டி உருவாகும் அபாயம் காரணமாக ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Warning for Ice) விடுக்கப்பட்டுள்ளது.

உருகிய பனி மீண்டும் உறையக்கூடும் என்பதுடன், குளிர்கால மழை மற்றும் உறைபனி இணைந்து ஆபத்தான நிலை உருவாகக்கூடும் எனவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதியது பழையவை