இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

 


இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது (T20) கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சுக்கு முன்னால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 16.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக எட்டி, போட்டியில் வெற்றியை உறுதி செய்தது.

புதியது பழையவை