கண்டி–யாழ்ப்பாண பிரதான வீதி (A-009) யின் மஹய்யாவ புகையிரத பாதைக்கு கீழாக கொங்கிரீட் சுரங்கப் பாலம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக தேசிய போட்டி விலைமுறை அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலையில், மூன்று விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை தொழில்நுட்ப மற்றும் நிதி அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தை M/s NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வரி சேர்க்கப்படாமல் ரூ.699.58 மில்லியன் செலவில் வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவின் பேரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சுரங்கப் பாலம் நிர்மாணம் மூலம், வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன், பாதுகாப்பான மற்றும் துரிதமான போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.