புதிய நிலஅளவையாளர் நாயகம் நியமனம் – அமைச்சரவை ஒப்புதல்

 

தற்போது நிலஅளவையாளர் நாயகமாக கடமையாற்றி வரும் என். கே. யூ. றோஹண, 2026 ஜனவரி 31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், உருவாகும் வெற்றிடத்திற்கு புதிய நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, தற்போது மேலதிக நிலஅளவை நாயகமாக (மத்திய) கடமையாற்றி வரும், இலங்கை நிலஅளவை சேவையின் விசேடதர அதிகாரியான பீ. கே. எல். எஸ். பண்டுவாவல, 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிலஅளவையாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நியமனம் தொடர்பான யோசனை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்ததன் பேரில் அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை