கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற போது, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ரயில் கடவை பகுதியில் வீதி காவலாளர் காணப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு முன்னரும் இதே பகுதியில் இதுபோன்ற விபத்துகள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய இரத்தினராசா கிருஷ்ணமோகன் என்பவராவார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
