ஒன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் மக்களின் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்தியாவின் பிரபல தனியார் ஒன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
அன்றாடப் பயன்பாட்டு பொருட்களிலிருந்து உயர்மதிப்புடைய மின்னணு சாதனங்கள் வரை பல்வேறு பொருட்களை இணையத்தின் மூலம் வாங்கும் போக்கு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பொருட்களின் ஒன்லைன் விற்பனையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் தகவல்களின் படி, கடந்த ஒரே ஆண்டுக்குள் சென்னையைச் சேர்ந்த ஒருவர், 228 தடவைகள் ஆணுறைகளை இணையம் வழியாக ஆர்டர் செய்து, மொத்தமாக ரூ. 1,68,389 (இந்திய ரூபாய்) செலவிட்டுள்ளார் என்பதும் கவனம் பெறுகிறது.
மேலும், ஒன்லைன் தளங்களில் ஆணுறை விற்பனை மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், சராசரியாக ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒரு முறை ஆணுறை ஆர்டர் இடம்பெறுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.