டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
முழுமையாக (நூறு வீதம்) இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அனைத்து வீதிகளிலும் பேருந்து சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பித்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான பெரிய அளவிலான பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
