ஜப்பானில் 6.7 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



 ஜப்பானின் வட-கிழக்கு பிராந்தியத்தில் 6.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு முகமை தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ளூர் நேரப்படி காலை 11:44 மணிக்கு 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 4.4 முதல் 5.7 என்கிற அளவு வரையில் மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

ஜப்பானின் கிழக்கு கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அலைகள் 1 மீட்டர் (3.3 அடி) உயரம் வரை எழும்பலாம் என வானிலை ஆய்வு நிறுவனத்தால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் 7.5 என்கிற அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பலர் காயமடைந்திருந்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் வலுவான அதிர்வுகள் ஏற்படலாம் என்றும் மக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. முட்சு நகரிலிருந்து 6,000 பேர் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை