மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: 7 மாவட்டங்களில் தொடரும் அபாயம்!


 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விபரங்கள்:

பதுளை

கண்டி

மாத்தளை

நுவரெலியா

குருநாகல்

கேகாலை

இரத்தினபுரி

குறிப்பாக, கண்டி மாவட்டத்திற்கும், குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை (சிவப்பு) அபாய அறிவிப்பும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குத் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதியது பழையவை