ஜப்பானில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம்: பாரிய ஆழிப்பேரலை எச்சரிக்கை!



 வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஆமோரி மற்றும் ஹொக்காய்டோ பகுதிகளின் அருகே கடலில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுனாமிக்கான அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் சுமார் மூன்று மீற்றர் (ஏறக்குறைய 10 அடி) உயரம் வரையிலான மிகப் பெரிய அலைகள் ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஆமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் உண்டாகியுள்ளது.

இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களைப் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு ஜப்பான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதியது பழையவை