வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் உள்ளிட்ட சிலர், ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்ற வேளையில், அப்பகுதியைச் சேர்ந்த குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞர், உடனடியாக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த யோ. அபிசாந் (வயது 19) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளும் தொடர்ந்துவருகின்றன.
