சாணக்கியன் MP விடுத்த கோரிக்கை: அரசு செவிசாய்க்குமா?

 


கண்டி - கம்பளை பகுதியில் அமைந்துள்ள கணபதி தோட்ட மக்களுக்குப் பாதுகாப்பான வசிப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை அவர், கம்பளை - கணபதி தோட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கிய நிகழ்வுக்குப் பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தபோது வலியுறுத்தினார்.

புதியது பழையவை