டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உருவான கடுமையான அனர்த்த நிலைமைகள் குறித்து Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது X சமூக வலைதளத்தில் இதை பதிவிட்டுள்ளார்.
அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்யவும், சேதமடைந்த பகுதிகளை மீளமைப்பதற்கான பணிகளில் பங்காற்றவும் தேவையான நிதி மற்றும் நன்கொடைகள் வழங்க Apple நிறுவனம் தயாராக இருப்பதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.
