கிர்கிஸ்தானுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் சீனாவின் வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் இன்று வியாழக்கிழமை 6.0 ரிக்டர் அளவைப் பெற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன பூகம்ப கண்காணிப்பு மையம் (CENC) அறிவித்துள்ளது.
கிர்கிஸ்தான்–ஜின்ஜியாங் எல்லை அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு சற்றுநேரம் தொலைவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.44 மணிக்கு (0744 GMT) இந்த அதிர்வு பதிவாகியது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தரையின் கீழ் சுமார் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் CENC தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 4.34 மணியளவில் உயிர்ச்சேதம் அல்லது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் இயல்பான முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
