ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி



 ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையின்பேரில் இந்த உதவி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனுடன், நாட்டின் ஆற்றல் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதி, இலங்கையின் மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக செயல்முறைகளை மேலும் திறன்சார் மற்றும் நவீனமாக மாற்ற உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு தலா 2 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.

புதியது பழையவை