திரிபோஷ நிறுவனத்தால் திறைசேரிக்கு ₹100 மில்லியன் நிதி உதவி

 


லங்கா திரிபோஷ நிறுவனம் தனது வருடாந்த இலாபத்தின் ஒரு பகுதியாக ரூபாய் நூறு மில்லியனை (100 மில்லியன்) திறைசேரிக்கு வழங்கியுள்ளது.

இந்த நிதிப் பங்களிப்பானது இன்று (டிசம்பர் 10) மேற்கொள்ளப்பட்டது.

திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் திரு. அமல் அத்தனாயக்க தலைமையிலான குழுவினர், இதற்கான காசோலையை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இந்த முக்கிய நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் திரு. வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை