ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

 


ஐரோப்பிய ஒன்றியம் (European Union - EU) இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ தொகையான அவசர மனிதாபிமான உதவியை வழங்க உறுதிபூண்டுள்ளது.

இந்த உதவித்தொகை, அண்மையில் "திட்வா" (Ditwa) புயலால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்குத் தேவையான மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை குழுக்கள் ஆரம்பித்துள்ளன. இக்குழுக்கள் மூலம் வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மொத்த மனிதாபிமான உதவித் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் பலத்தையும் அளிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முழு மனதுடன் தயாராக உள்ளது என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புதியது பழையவை