சட்டவிரோதப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைகள் கடத்தல்: ஒருவர் கைது



 கடல் வழியாகச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைகளுடன் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வென்னப்புவ மா ஓயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் பிடிபட்டதாகத் தெரியவருகிறது.

சந்தேக நபரிடமிருந்து 626 கிலோ கிராம் எடை கொண்ட 17 பொதிகளில் அடைக்கப்பட்ட பீடி இலைகள் மற்றும் 60,000 பக்கெட்டுகள் அடங்கிய 20 பொதிகளில் இருந்த சந்தேகத்திற்கிடமான பூச்சிக்கொல்லிகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வென்னப்புவ பொலிஸார் இதுகுறித்து தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை