ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வேண்டுதலை ஏற்று, பாராளுமன்ற நிரந்தரக் கட்டளை 16இன் கீழ் சபாநாயகரால் இந்த அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சார்ந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியானது.
