ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிகழும் இந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை தனது முதல் ஆட்டத்தை இன்று காலை 10.30 மணிக்கு எதிர்கொள்கிறது.அதன் வழியே, இன்று இலங்கை அணியும் நேபாள அணியும் களம் இறங்கிப் போட்டியிடவுள்ளன.
குறிப்பாக, இலங்கை குழுவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் குகதாஸ் மாதுளன் என இரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.