வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்தன. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த தகவலறிந்ததும், மீட்புப் படையினர் விரைந்து வந்து, இடிபாடுகளுக்கு மத்தியில் தீவிரமாகத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இடிந்து விழுந்த இந்தக் கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தமை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
