யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில், 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி பொலிஸார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
