மன்னம்பிட்டி - கொட்டலீய பாலத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதி ஒன்றில், கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் பொலன்னறுவை - தளுகான பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதியாக தொழில் புரிந்த குறித்த நபர், வீடு திரும்பாதது குறித்து அவரது மனைவி முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை பொலிஸார் தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
வெலிகேபொலவில் கொலை
இதற்கிடையில், வெலிகேபொல ஹந்தகிரிகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஓர் அறையில், ஒரு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 40 வயதான ஒருவராவார்.