வரலாற்றில் மிக மோசமான தரவு கசிவு: 20 கோடி போர்ன்கப் பயனர்களின் தகவல்கள் அபகரிப்பு

 


உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வயதுவந்தோருக்கான இணையத்தளங்களில் ஒன்றான போர்ன்கப் ப்ரீமியம் (Pornhub Premium) பெரிய அளவில் தரவுகளை வெளியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், தமது சொந்த அடிப்படைக் கட்டமைப்புகள் ஊடுருவப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 கோடிக்கும் அதிகமான தரவுகளை யாரோ சிலர் அபகரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதில் கட்டணச் சந்தாதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தேடல் பதிவுகள், பார்த்த காணொளிகள் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் போன்ற தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

இந்தத் தரவு வெளியேற்றம், பயனர் நடத்தைகளைக் கண்காணிக்கப் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக்ஸ்பெனல் (Mixpanel) எனும் பகுப்பாய்வு சேவையுடன் சம்பந்தப்பட்டது எனப் புலப்பட்டுள்ளது.

போர்ன்கப் (Pornhub) நிறுவனம் 2021 ஆம் ஆண்டிலேயே மிக்ஸ்பெனல் (Mixpanel) உடனான தனது உறவைத் துண்டித்திருந்தாலும், அந்நேரத்தில் திரட்டப்பட்ட வாடிக்கையாளர் விவரங்களே திருடப்பட்டுள்ளன.

புதியது பழையவை