பிள்ளையானின் மற்றுமொரு கூட்டாளி கைது


 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய நண்பரான அஜித்தை, மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் இருக்கும் நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு மறைந்துபோனமை சம்பந்தமாகவே அஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்கு முன்னர், பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.

இதன் காரணமாக, CID ஆல் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் நண்பரான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் குவைத் நாட்டுக்குத் தப்பிச்சென்று மறைந்திருந்தார்.

இந்தச் சூழலில், அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் நாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே இன்று பிடிபட்டுள்ளார்.

புதியது பழையவை