2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 வெளிநாட்டுப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தகவல் வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பெரும் இயற்கை அழிவுகள் ஏற்பட்ட நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குத் தொடர்ந்து வருகை தருவதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்ச வருகை தந்த நாடுகள்
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை 501,097 ஆகும்.
ஐக்கிய இராச்சியம் – 200,939 பயணிகள்
ரஷ்யா – 171,099 பயணிகள்
ஜேர்மனி – 139,355 பயணிகள்
சீனா – 127,553 பயணிகள்
பிரான்ஸ் – 104,802 பயணிகள்
அவுஸ்திரேலியா – 101,012 பயணிகள்
மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களுக்குள் மட்டும் 115,616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.