இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தோஷகானா வழக்கில் தீர்ப்பு

 


தோஷகானா (Toshakhana) வழக்கில், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும், அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன், அவர்கள் இருவருக்கும் தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் முதுமையையும், புஷ்ரா பீபி ஒரு பெண் என்பதையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குக் குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாகச் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புதியது பழையவை