டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்துக்கு, Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பில் 25 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை, Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. எம். எல். பொன்சேகா, நேற்று (19) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஒப்படைத்தார்.