கடந்த 24 மணி நேரத்தில் 981 பேர் கைது

 


பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'முழு நாடுமே ஒன்றாக' (Yukthiya) என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (14) 981 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் பிரதான இலக்குகள் பின்வருமாறு:

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல். போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல். நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல். போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்தல். போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல். செப்டெம்பர் மாதம் முதல் இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின்போதுதான் இந்தச் சந்தேக நபர்கள் பொலிஸாரால் பிடிபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 513 கிராம் ஹெரோயின், 890 கிராம் ஐஸ், 35,349 கஞ்சா செடிகள் உட்பட பெருமளவிலான போதைப்பொருட்களும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

புதியது பழையவை