மொராக்கோவின் சஃபி மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொராக்கோவின் தலைநகருக்கு அருகே உள்ள சஃபி மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) முதல் கனமழை நீடித்து வருகிறது.
இந்தக் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 37 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு, 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ள நீர் ஊருக்குள் விரைந்து வரும்போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், மொராக்கோவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் சிலவற்றை வறண்டு போகச் செய்த ஏழு ஆண்டுகால வரட்சிக்குப் பிறகு, அட்லஸ் மலைகளில் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
