கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில்: பாததும்பர, பாதஹேவாகெட்ட, ஹாரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனே, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்கவட்ட கோரளை, அக்குறணை, மினிபே, உடபலாத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, கங்கஇஹல கோரளை.
கேகாலை மாவட்டத்தில்: புளத்கொஹுபிட்டி, மாவனெல்ல, அரநாயக்க, கலிகமுவ, வரக்காபொல, கேகாலை, எட்டியாந்தோட்டை, ரம்புக்கனை.
குருணாகல் மாவட்டத்தில்: ரிதீகம, அலவ்வ, மாவத்தகம, மல்லவபிட்டிய, பொல்கஹவெல.
மாத்தளை மாவட்டத்தில்: இரத்தோட்டை, வில்கமுவ, லக்கல, பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவெல, மாத்தளை, நாவுல, பல்லேபொல, யட்டவத்த.
ஆகிய பிரதேச செயலாளர் வலயங்களுக்கே இவ்வாறு மண் சரிவு தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
