நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உட்பட நால்வர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, பெண் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் ‘மாவா’ எனப்படும் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.