யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் மீது நேற்று சனிக்கிழமை (27) பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது ஆறு பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதிகளில் செயல்பட்ட இந்த விடுதிகளை இலக்கு வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
