50 இலட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவ வீரர்கள்

 


பேரழிவு மீட்புப் பணிகளின்போது, இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டெடுத்த ரூபா 300,000 ரொக்கப் பணத்தையும், சுமார் ரூ. 50 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் உரிய உரிமையாளரிடம் திருப்பி அளித்துள்ளனர்.

ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைந்து அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள், தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்தப் பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

மண்சரிவு காரணமாக முழுமையாக சேதமடைந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள்தான் இந்தப் பொருட்களும் பணமும் கிடைக்கப்பெற்றன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் 2025 டிசம்பர் 14 ஆம் திகதி அன்று உரிய உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையான மற்றும் பாதுகாப்பான வழியில் வழங்கப்பட்டது.

புதியது பழையவை