607 ஆக உயர்ந்த மரண எண்ணிக்கை – அனர்த்தத்தின் தற்போதைய நிலவரம் என்ன?



 இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரவித் தாக்கிய திட்வா புயல் (அல்லது சூறாவளி) காரணமாக உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், 214 தனிநபர்கள் காணாமல் போயுள்ளார்கள்.

கண்டி மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்தில் 232 பேர் பலியாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவு காரணமாகவே இறந்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், 25 மாவட்டங்களைச் சார்ந்த 5,86,464 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் துயருக்கு ஆளாகியுள்ளனர். 4,164 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 67,505 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், 1,211 தங்குமிட பாதுகாப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 43,715 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,537 பேருக்குத் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை