மொரகஹகந்த நீர்த்தேக்கம்: உச்ச நீர்மட்டம் நெருங்குவதால் அவசர எச்சரிக்கை!



 எதிர்வரும் வரும் நாட்களில் மழை பெய்யும் அளவு அதிகரித்தால், மொரகஹகந்த நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச நீர் அளவை எட்டும் என்று இலங்கை மகாவலி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

உச்ச நீர்மட்டத்தை அடையும் வேளையில், நீர்த்தேக்கத்துக்கு நீர் வரும் வேகத்தைப் பொறுத்து, அதன் வான்கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வான்கதவுகள் திறக்கப்பட்டால், நீர் அம்பன் ஆற்றில் விடுவிக்கப்படும்.இதன் விளைவாக, அம்பன் ஆறு மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரும் என மகாவலி அபிவிருத்தி சபை சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்கூறிய காரணங்களால், அம்பன் ஆறு மற்றும் மகாவலி ஆற்றின் இரு பக்கங்களிலும் வசிக்கும் மக்கள் நீர் மட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மகாவலி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 98.87%$ ஆக உள்ளது. 

வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகமானால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் உச்ச அளவை தொடும். இது தொடர்பாக மகாவலி அபிவிருத்தி சபை பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிவித்திருக்கிறது.

வான்கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது குறித்து எல்லெஹெர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து மக்களுக்கும் விளம்பரங்கள்/அறிவிப்புகள் மூலம் தெரியப்படுத்த, மொரகஹகந்த பொறுப்பிலுள்ள பொறியியலாளர் தனது முகாமைத்துவப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதியது பழையவை