63 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட் தொகை பறிமுதல்



 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 63 இலட்சம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கை நேற்று (21) அதிகாலை, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் பயணப் பையில் இருந்த மூன்று பெட்டிகளில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதியது பழையவை