தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி

 


தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு மேற்கே அமைந்துள்ள பெக்கர்ஸ்டால் நகரில், அடையாளம் காணப்படாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நேற்று இரவு ஒரு உணவகத்தில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தாக்குதலின் போது மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தை அடுத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகில் அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்காவில், சமீப காலமாக தொடர்ச்சியாக நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்திலும், பிரிட்டோரியா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை