இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (21) இராணுவத்தினர், தர்மபுரம் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
சுண்டிகுளம் கலப்பு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 53 கிலோ 500 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா மீட்பு தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
