சட்டவிரோத மதுபான விற்பனை செய்த கர்ப்பிணிப் பெண் கைது



 தூர இடங்களுக்கு பயணம் செய்யும் பேருந்து ஊழியர்களுக்கு, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்த சம்பவத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்து ஊழியர்களை இலக்காகக் கொண்டு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்கிறார் என்ற தகவல் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்ததையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

வென்னப்புவ – வைக்கால பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கர்ப்பிணிப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் தனது கணவருடன் இணைந்து மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்து 96 போத்தல்கள் கசிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்களையும் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை