நாட்டைப் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், 211 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன. இதன் விளைவாக, 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 நபர்கள் இதனால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 நபர்கள் தொடர்ச்சியாக 847 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது. ஏற்பட்ட பேரழிவுகளால் 5,713 வீடுகள் முற்றிலுமாகவும், மேலும் 104,805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
