கிளிநொச்சி மாவட்டத்தில் தித்வா புயலினால் கடுமையாக சேதமடைந்த பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.
பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் பாலம் புனரமைப்பு
இதன்படி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் 11 ஆவது கிலோ மீட்டரில் உள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகளின் குழுவொன்று கிளிநொச்சி வந்து சேர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்புப் பாலம்
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தற்காலிக இரும்புப் பாலத்தைப் பொருத்தும் பணிகளில் இந்திய இராணுவப் பொறியாளர் பிரிவின் அதிகாரிகள், இலங்கை இராணுவப் பொறியியல் பிரிவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
