மகளிர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

 


வடமாகாண மகளிர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (17) மாலை அடம்பன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல், விநியோகம், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது, தெரிவு செய்யப்பட்ட 49 பெண் பயனாளிகளுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது.

சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் அவர்களின் சுயதொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் உட்படத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை