டிட்வா' சூறாவளிக்குப் பின்னரான சேத விபரங்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டை நிறைவு செய்வதற்குச் சுமார் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உத்தேசமான ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கையை டிசம்பர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்க முடியும் என பிரதி நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் உருவாக்கப்பட்ட 'REBUILDING SRI LANKA' (இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்) நிதியத்தின் மூலம் இந்தக் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனத் தலைவர்கள், பொது மற்றும் தனியார்த்துறைப் பிரதிநிதிகளைக் கொண்ட முகாமைத்துவக் குழுவிடம், தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைத் திட்டங்களைத் தயாரித்தல், வளங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் மீட்புப் பணிக்கான நிதியை ஒதுக்குதல் ஆகிய பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், உள்நாட்டு, சர்வதேச நாடுகள், அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் 'REBUILDING SRI LANKA' நிதியத்திற்கு தொடர்ந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதி நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
