சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், இந்தியா மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இந்த உதவிப் பொருட்கள் இன்று (07) பிற்பகல் கொழும்பில் உள்ள துறைமுகத்தின் BQ 2 பகுதியில், இலங்கை அதிகாரிகளால் முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்டன.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க (வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்) ஆகியோர் இந்த நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர்.
