கனடா சரேயில் நள்ளிரவு துப்பாக்கிச் சூடு: வணிக வளாகத்தில் பதற்றம்



கனடாவின் சரே (Surrey) நகரில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கனேடிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரேயில் உள்ள 120வது வீதியில் அமைந்திருக்கும் அந்த நிறுவனத்தில் இருந்து அதிகாலை 2.30 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதாக 'வன்குவர் சண்' செய்தித்தாள் விபரிக்கிறது.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தபோது, பணியாளர்கள் அந்த வணிக நிலையத்திற்குள் இருந்தபோதிலும், எவருக்கும் காயமேற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரி லின்சே ஹவ்டன் (Lindsey Houghton), இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அச்சுறுத்தி பணம் பறிக்கும் (மிரட்டிப் பணம் பெறும்) நோக்கில் நடந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். 

புதியது பழையவை