பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது – ஐநா கடும் கண்டனம்

 


நியூயார்க்: பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெற்ற மசூதி மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் வலியுறுத்தினார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை