பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரைக் கேட்டுக்கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட எடுத்த முடிவை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரைத்துள்ளார்.
இந்தச் செய்தி தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டபோது, கடந்த சில நாட்களாகத் தமது இருப்பிடங்களையும், வாழ்வாதாரத்தையும், ஏன் உணவு மற்றும் அசுத்தமற்ற குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளையும் கூட இழந்த குடும்பங்களைச் சந்தித்தேன்.
இந்தச் சவாலான நிலையில், ஒவ்வொரு சமூகத்திற்கும் உதவி சென்றடைவதை உறுதிப்படுத்தும் கடமை இப்போது நாடாளுமன்றத்திற்குக் காணப்படுகிறது. இந்தத் தருணம் அரசியலைப் பற்றியதல்ல, மக்களைப் பற்றியது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.